ஒபெக் நாடுகள் எடுத்த திடீர் முடிவு - பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு

Update: 2022-10-06 07:46 GMT

கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளின் ஆலோசனை கூட்டம் ஆஸ்திரியா(AUSTRIA) தலைநகர் வியன்னாவில்(VIENNA) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 20 லட்சம் பேரல்கள் அளவுக்கு குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்யின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஒபெக் நாடுகளின் இந்த முடிவு இந்திய பொருளாதாரத்தின் மீது மேலும் அழுத்த‌த்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்