கல்லூரி விடுதியில் மாணவர் மரணம்..தூக்கில் தொங்கிய படி சடலமாக மீட்பு

Update: 2022-08-23 03:05 GMT

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அலோக் குமார். 19 வயதான இவர், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். செமஸ்டர் விடுமுறை கடந்த 11ஆம் தேதி விடப்பட்ட நிலையில் விமான டிக்கெட் கிடைக்காததால் விடுதியிலேயே தங்கிக் கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திடம் அலோக் குமார் கூறியதாக தெரிகிறது. இதனிடையே அவர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் கூறவே அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அப்போது மாணவர் அலோக் குமாரின் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டது. மாணவரின் மரணத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்