சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த பிரதீப், தனியார் கல்லூரியில் 4ம் ஆண்டு இளங்கலை மெக்கானிக்கல் பயின்று வருகிறார். இவர் பிரத்யேக பேட்டரி வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார். 2 மணி நேரம் சார்ஜ் செய்தால், சுமார் 45 கிலோமீட்டர் தூரம் வரை இயங்கும் வகையில் தயாரித்துள்ளார். 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் நின்று கொண்டும், அமர்ந்துகொண்டும் பயணிக்கலாம் என கூறுகிறார் பிரதீப். கைரேகை பதிவு செய்தால் மட்டுமே வாகனத்தை இயக்கக்கூடிய வகையில் தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளார். குரல் பதிவை கொண்டு பாடல்கள் ஒலிபரப்பு செய்தல், வண்ண விளக்குகளால் இரவு நேரத்தில் ஒளிக்கும் விதமாகவும் தயாரித்துள்ளார். வாகனத்தை தயாரிக்க 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்ததாக பிரதீப் தெரிவித்தார். இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து, அனைத்து இடங்களுக்கும் இயக்கி காண்போரை கவர்ந்தார்.