ஷவர்மாவை ருசி பார்த்த நாய்...இதுக்கு பேர் தான் குடும்ப உணவகமா? - தீயாய் பரவும் வீடியோ

Update: 2023-01-30 07:42 GMT

தூத்துக்குடியில் உணவகத்தில் ஷவர்மா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சிக்கனை நாய் சாப்பிடும் வீடியோ வெளியானதையடுத்து, உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் பிரபல தனியார் உணவகம் செயல்பட்டு வந்தது. அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் ஷவர்மா செய்வதற்காக உணவகத்திற்கு வெளியே சிக்கனை வேக வைத்துள்ளனர்.

இந்நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்த தெரு நாய் ஒன்று, வேக வைத்த சிக்கனை ருசி பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

Tags:    

மேலும் செய்திகள்