கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் சுவாமிநாதன் என்ற 84 வயது முதியருக்கு 3 மகன்கள் உள்ளர். ஆனால், தந்தையை கவனிப்பதில் இதில் திருமணம் ஆன 2 மகன்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மூன்றாவது மகன் சுஜின் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தந்தையை உடனிருந்து கவனித்து வந்துள்ளார். 3வது மகனுக்கு திருமணம் ஆகாததால் மன உளைச்சல் அடைந்த சுவாமிநாதன், முதியோர் பாதுகாப்பு நல தீர்ப்பாயத்தில் மனு அளித்துள்ளார். இதையடுத்து 3 மகன்களையும் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்ட பத்மநாபபுரம் சப் கலெக்டர், தந்தையை கவனிக்க 3 பேரும் மாதம் தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், 15 நாட்களுக்கு ஒரு மகன் என சுழற்சி முறையில் தந்தையை பராமரிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டார். பல நாள் போராட்டத்தால் கிடைத்த பலனை அனுபவிக்க முடியாமல் முதியவர் சுவாமிநாதன் திடீரென உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.