பிடிபட்டதும் 'அணிலை' உயிருடன் கக்கிய பாம்பு - சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பரபரப்பு

Update: 2023-06-21 03:50 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் அமரும் இடத்தில் சாரைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்புபிடி வீரர் பரமேஸ்வர தாஸ் ரயில் நிலையத்தின் மேற்கூறையில் பதுங்கி இருந்த சாரப்பாம்பை லாவகரமாக மீட்டார். அப்போது அணில் குஞ்சு ஒன்றை முழுங்கியிருந்த சாரைப்பாம்பு அதனை கக்கியது. 20 நிமிடங்களுக்கு மேலாக சாரப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்த அணில் குஞ்சு உயிருடன் மீட்கப்பட்டது அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது....

Tags:    

மேலும் செய்திகள்