மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை கூலிப்படை ஏவி கொன்ற தாய் - சிவகங்கையில் அதிர்ச்சி

Update: 2023-04-03 05:51 GMT
  •  சிவகங்கை மாவட்டம், நாச்சுழியேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா. தனது கணவனை இழந்த இவருக்கு, ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருந்துள்ளனர்.
  • இந்நிலையில், இவரது மகன் அலெக்ஸ் பாண்டியன் தனது தாயை அடித்து துன்புறுத்தியதாகவும், தனது சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது.
  • இதனால் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் சகோதரிகள், கூலிப்படையை வைத்து அலெக்ஸ் பாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
  • அதன்படி, இரண்டு தினங்களுக்கு முன்பு கூலிப்படையினர் வீடு புகுந்து அலெக்ஸ் பாண்டியனை கொலை செய்துள்ளனர்
  • . இதனிடையே, அவரது தாய் மற்றும் சகோதரிகள் தமிழரசி மற்றும் கலையரசி ஆகியோரது நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பதாக, உறவினர்கள் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.
  • போலீசார் விசாரணையில், அவர்கள் கூலிப்படையை வைத்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும், கூலிப்படையைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்