"கடைக்கோடி சுய உதவி குழுக்களை அடைய வேண்டும்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Update: 2022-12-20 02:13 GMT

அரசின் திட்டங்கள் கடைக்கோடி சுய உதவிக் குழுக்களுக்கு சென்றடைய வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் ஆகியவற்றின் செயல்பாடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இது தவிர தீனதயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்,

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், ஆகியவற்றின் நடவடிக்கை, அடைய வேண்டிய இலக்குகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசின் திட்டங்கள் கடைக்கோடி சுய உதவிக் குழுக்களுக்கு சென்றடைய வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்