பைனலுக்கு சென்ற CSK.. அனுமதியின்றி நேப்பியர் பாலத்தில் நடத்தப்பட்ட சூட்டிங்...
சென்னை, நேப்பியர் பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், நேப்பியர் பாலத்தில் சிலர் படப்பிடிப்பு நடத்தி வருவதை கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியதை கொண்டாடும் வகையில் தனியார் நிறுவனம் சார்பில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது தெரியவந்தது. அவர்களிடம், அனுமதி சான்றிதழ் எதுவுமில்லாத நிலையில், உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதால், பெசண்ட் நகரை சேர்ந்த விஜய்சேகர் மற்றும் மாதவரத்தை சேர்ந்த யோகேஷ் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.