மத்திய அரசின் 'ஸ்வட்சதா ஆப்' செயலிக்கு புகார் அனுப்பியவருக்கு வந்த அதிர்ச்சியூட்டும் பதில்

Update: 2022-11-27 03:15 GMT

வேலூரில் ஓட்டேரியை அடுத்த பெரியார் தெருவில் சிமெண்ட் சாலையில் வருடக்கணக்கில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, தெருவின் அவலம் குறித்து புகைப்படம் எடுத்து, மத்திய அரசின் 'ஸ்வட்சதா ஆப்' செயலியில், கண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். இதற்கு செயலி தரப்பு அதிகாரி, சாலை சீரமைத்து விட்டதாக‌க்கூறி தார் சாலை ஒன்றை படத்தை பதிவிட்டு பதிலளித்துள்ளார். சிமெண்ட் சாலை உள்ள தெருவை சரிசெய்யாமல், அதனை சீரமைத்துவிட்டதாக‌க் கூறி வேறு ஒரு சாலையின் படத்தை பதிவிட்டிருப்பது, செயலி மீதான நம்பகத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தெருவை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்