"முக்கிய தலைவர்களை கொல்ல சதி" சேலத்தில் போடப்பட்ட திட்டம் | NIA விசாரணையில் திடுக் தகவல்
சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள், முக்கிய தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேலம் விநாயகம்பட்டி பகுதியில் கடந்த 7ஆம் தேதி சோதனை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த விவகாரத்தில் கைதான சஞ்சய்பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தியிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தவும், முக்கிய தலைவர்களை கொல்ல சதிதிட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது.
மேலும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைதான இளைஞர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து, என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.