ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அடுத்த வாரம் அடித்த கட்ட பணி நீக்க நடவடிக்கைகளைத் துவங்கவுள்ளது ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு பொருளாதரா சிக்கல்களை எதிர்கொண்டு வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசையாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. முதல் கட்டமாக மெட்டா கடந்த நவம்பரில் 11 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது. கடந்த மாதம் 4 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கிய மெட்டா, அடுத்த வாரம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலி செய்திகளைக் கண்காணிக்கும் மேலும் 6 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து விடுவிக்க உள்ளது