"அசைவ பிரியர்களுக்கு shock " கெட்டு போனதை சூடுபடுத்தி விற்பனை - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

Update: 2023-07-19 09:23 GMT

    காஞ்சிபுரத்தில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த அசைவ உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்த தனியார் அசைவ உணவகத்தில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், முதல் நாள் சமைத்த அசைவ உணவுகளை சூடு படுத்தி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த உணவுகள் அழிக்கப்பட்ட நிலையில், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டதாக கூறி உணவகத்திற்கு ரூபாய் இரண்டாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்