தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மகராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார், 83 வயதாகியும் அரசியலில் இருந்து ஏன் ஓய்வு பெறவில்லை என்ற அஜித் பவாரின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் தான் அயற்சி அடையவும் இல்லை ஓய்வு பெறவும் தேவை இல்லை என்றார். அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார். கட்சி நிர்வாகிகள் விரும்பியதைத் தொடர்ந்து அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் சரத்பவார் கூறினார். பிரஃபுல் பட்டேலுக்கு பத்து ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்த, அவர் மக்களவை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டு தோல்வி அடைந்த பின்னரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.