எழுத்தாளர் இ.ஜீன் கரோலை 1990களின் மத்திய பகுதியில், ட்ரம்ப் பாலியல் வன்புணர்வு செய்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் கரோல் பணம், புகழுக்காக இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாக ட்ரம்பின் வழக்கறிஞர் வாதத்தைத் துவங்கினார்... அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள இந்த சமயத்தில் அவர் அடுத்தடுத்த பாலியல் வழக்குகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.