பஸ்ஸில் சில்மிஷம் செய்த கண்டக்டர்..போன் போட்டு சம்பவம் செய்த மாணவி -கோவை பெண்ணின் தில்
கோவையில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனரை, தர்ம அடி கொடுக்காமல் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கரூரில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவியிடம், நடத்துனராகப் பணிபுரியும் ஞானசேகர் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, ஆபாசமாக பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து, அந்த மாணவி, தனது நண்பர்களை வரவழைத்து, கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே இறங்கியபோது, பேருந்து வேகமாக புறப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவியின் நண்பர்கள், பேருந்தை வழிமறித்து, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நடத்துனரை பிடித்து, சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.