ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பெயரை பயன்படுத்தி 60 நிறுவனங்களிடம் இருந்து 3 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த நபரை மும்பை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் அளித்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட மும்பை சைபர் கிரைம் போலீசார், ஆந்திரா- ஒடிசா எல்லையில் பதுங்கியிருந்த எலக்ட்ரானிக் விற்பனையாளர் புதுமுரு (Budumuru)வை கைது செய்தனர். கைதான நபர் மீது ஏற்கனவே 30 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.