சென்னையில், போக்குவரத்து தணிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை தாக்கியதாக, பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் எம்.பியும், பாஜக மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் ராஜ், நேற்று இரவு சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் காவலர், அவரை சோதனையிட முயன்ற போது, பிரதீப் ராஜ் அந்தப் பெண் காவலரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால், போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததால், அவரை வீட்டிற்கு அனுப்பிய போலீசார், மீண்டும் இன்று காலை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகும் படி தெரிவித்துள்ளனர்.