மருந்து கடையில் ஊசி போட்ட நபர் உயிரிழப்பு... மருந்து கடைக்கு சீல் வைத்த வட்டாட்சியர்
சேலம் மாவட்டம், வெள்ளாளப்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சின்னப்பையன். 52 வயதான இவர், உடலில் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாக அதே பகுதியில் உள்ள மருந்து கடைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, கடையின் உரிமையாளர் முரளி என்பவர் அவருக்கு ஊசி ஒன்று செலுத்தியுள்ளார். ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களில், சின்னப்பையன் கடையின் வாசலில் வாந்தி எடுத்து விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஊர் மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர், மருந்து கடைக்கு சீல் வைத்தார். மேலும், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.