சபரிமலை விமான நிலைய திட்டத்தின், சமூக பாதிப்பு இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதையொட்டி, அவர்களது வசதிக்காக கோட்டயம் மாவட்டம், எருமேலியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, இறுதி பாதிப்பு அறிக்கை வெளியிடப்பட்டதில், மொத்தம் 579 குடும்பங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நிலம் கையகப்படுத்தும் போது, நியாமான இழப்பீடு மற்றும் மறுவாழ்வு உறுதி செய்யப்பட வேண்டுமென அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அரசு நியமித்துள்ள நிபுணர் குழு அறிக்கையை விரிவாக ஆய்வு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.