டோலோ 650 மாத்திரை பரிந்துரை செய்ய மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி அளவில் பரிசு

Update: 2022-07-14 02:55 GMT

டோலோ 650 மாத்திரை பரிந்துரை செய்ய மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி அளவில் பரிசு 

டோலோ 650 தயாரிப்பு மாத்திரை நிறுவனம் மருந்துகளை விற்பனை செய்வதற்காக, மருத்துவர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவில் பரிசுப் பொருட்களை அளித்தது வருமான வரி சோதனையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 6ம் தேதி பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்கள் டோலோ-650 போன்ற மருந்துகளை பரிந்துரை செய்வதற்காக, அவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணம், பரிசு பொருட்கள், இலவசங்கள் என செலவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு முறையில் வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறாக, சுமார் 300 கோடி ரூபாய் அளவில் வரி ஏய்ப்பு செய்திருப்பதை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், சோதனையில் கணக்கில் வராத சுமார்1.20 கோடி ரூபாய் ரொக்க பணம்,1.40 கோடி ரூபாய் தங்கம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்