சர்ச்சையில் சிக்கிய ரோகிணி திரையரங்கம் - நரிக்குறவ மக்களுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு
நரிக்குறவ மக்களை தடுத்ததாக சர்ச்சையில் சிக்கிய சென்னை ரோகிணி திரையரங்கில், நரிக்குறவ மக்களுக்காக முந்திரி காடு திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. முந்திரிகாடு திரைப்படத்தில் நடித்த நடிகர் சோமுவின் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதனை ஏராளமான நரிக்குறவ மக்கள் கண்டு ரசித்தனர். இந்த திரைப்படத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது