மரண தண்டனையை உறுதி செய்யப்பட்டதை மறுஆய்வு செய்யக் கோரி, ரிட் மனு தாக்கல் செய்ய முடியுமா என்பதை உச்சநீதிமன்றம் ஆராயவுள்ளது. நாகபுரியில் 4 வயது சிறுமியை வன்கொடுமை செய்து, கல்லால் அடித்துக் கொன்ற வழக்கில், வசந்தா சம்பத் துபாரே என்பவரின் மரண தண்டனையை உறுதி செய்த உச்சநீமன்றம், மறு ஆய்வு மனுவையும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றத்தில் வசந்தா சம்பத் துபாரே ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரிக்க முடியுமா என்பது குறித்து ஆராய இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.