பழவேற்காட்டில் இருந்து சுமார் 20கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது...
புயல் பாதிப்பால் கருங்காலி பகுதியில் பழைய முகத்துவாரத்தில் கடல் கொந்தளித்து அலைகள் ஆர்ப்பரித்து சாலையில் புகுந்து ஏரியுடன் கலந்தது.
நீருடன் கடல் மணல் அடித்து வரப்பட்டு சாலையை மூடியது. 15 நாட்களுக்கும் மேலாக சாலையில் மணல் திட்டுக்கள் நீடிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கருங்காலி பகுதி பழைய முகத்துவாரத்தில் சுமார் 2 அடி உயரம் தேங்கிய மணல் திட்டுக்களால் வாகனங்கள் அவ்வழியே செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
சாலையில் கடல்நீர் புகுவது மற்றும் சாலை துண்டிப்பு காரணமாக சுமார் 20கிலோ மீட்டருக்கு பதிலாக 40கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சாலையை சிரமமின்றி கடந்து செல்ல மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் தங்கள் நீண்ட கால கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.