அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால்,
கரீம்கஞ்ச் பைபாஸ் சாலையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், அனைத்து வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. கரீம்கஞ்ச் நகரம் வழியாக பயோமாராவுக்கு மாற்றுப் பாதையில் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சேதம் சரி செய்யப்பட்டு, விரைவில் போக்குவரத்து தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.