வாடகைக்கு வீடு பிடிக்கும் கட்சி நிர்வாகிகள்... தனி பங்களா என்றால் தனி ரேட்டு
பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் பிரசாரம் களைக்கட்டியுள்ளது
உள்ளூர் திமுக, அதிமுகவினர் போட்டி போட்டு பிரசாம் செய்ய, வெளியூரை சேர்ந்த கட்சி காரர்களும் வாக்கு சேகரிப்பில் களமிறங்கி வருகிறார்கள்...
பிற மாவட்டங்களை சேர்ந்த திமுக, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிகிறார்கள். பறக்கும் படையினர் கெடுபிடியும் தீவிரமாகி வருகிறது. இதனால், விடுதிகள், ஓட்டல்களில் தங்கினால் போலீஸ், பறக்கும் படை சோதனையை சந்திக்க நேரிடும் என்பதால் முக்கிய நபர்கள் வீடுகளில் தங்க விருப்பம் காட்டுகிறார்கள்.
அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் எல்லாம் வாடகை அதிகம் என்றாலும் வீடுகளை பிடிக்க நாட்டம் காட்டுகிறார்கள். வசதியான வீடுகளுக்கு உள்ளூர் நிர்வாகிகள் தேடி அலைவதால், வாடகை வீடுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு வசதியான வீடுகளை வழங்கும் உரிமையாளர்கள் மாத வாடகையாக, 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் கேட்கிறார்கள். இதுவே பங்களாவாக இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் வரையில் வாடகையாக கேட்கிறார்கள் வீட்டு உரிமையாா்கள்....