டோல்கேட்டில் கட்டணம் செலுத்த மறுப்பு... தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரகளை

Update: 2023-05-15 14:25 GMT

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் நெல்லையில் நடக்கும் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார்.

குமரி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு வாகனங்களில் நெல்லைக்கு வேல்முருகனைச் சந்திக்கச் சென்றனர்.

அப்போது நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்கள் வந்த வாகனங்கள் அனைத்தையும் சுங்கச்சாவடியில் உள்ள அனைத்து பாதைகளிலும் நிறுத்தி போக்குவரத்தையும் தடை செய்ததாகக் கூறப்படுகிறது.

சுமார் 20 நிமிட வாக்குவாதத்திற்குப் பிறகு உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாங்குநேரி சுங்கச் சாவடியின் அத்துமீறல் தொடர்ந்தால் விரைவில் பொதுமக்களைத் திரட்டி தாக்குதல் நடத்துவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்