உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகள்
உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த வழக்கறிஞர்களை மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது.
மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் 9 பேரை பரிந்துரைத்த நிலையில், அவர்களை நியமிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து புதிதாக 11 பேருடன் ஏற்கனவே பரிந்துரைத்த 9 பேரையும் மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியம் வலியுறுத்தியுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.கிர்பாலின் மகனான சவுரப் கிர்பாலையும் மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது. கொலிஜியம் பரிந்துரைத்த பெயர்களை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.