வீர மரணமடைந்த 'தமிழ்' மேஜர் பெயரை.. அந்தமான் தீவுக்கு சூட்டிய பிரதமர்.. யார் இவர்? - மெய்சிலிர்க்க வைக்கும் நிஜ கதை

Update: 2023-01-29 09:07 GMT

ராமநாதன் ராமசாமி,மறைந்த மேஜர் பரமேஸ்வரனின் தம்பி

ஆனால் மேற்படிப்பை தொடர விருப்பம் இல்லாதவர் ராணுவத்தில் சேர வேண்டும் என விருப்பம் கொண்டுள்ளார். அதற்கான பயிற்சியை சென்னை கிண்டியில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் பயின்று... இறுதியாக ராணுவத்தில் இணைந்து, நாட்டிற்காக சேவையாற்ற தொடங்கினார்.

இந்நிலையில், தமிழ் நன்கு தெரியும் என்பதால்

1987 ஆம் ஆண்டு, பரமேஸ்வரன் தலைமையிலான

அமைதி காக்கும் படை, இந்திய ராணுவம் சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

விடுதலை புலிகளின் போர் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த காலகட்டம் அது. ஒரு நாள் இலங்கையில் உள்ள வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் கொண்ட பரமேஸ்வரன் தலைமையிலான அமைதி காக்கும் படை மீது விடுதலை புலிகள் தாக்க தொடங்கியுள்ளனர்.

இதில் கைதவறி தனது துப்பாக்கி கீழே விழுந்த பிறகும்... வெறும் கைகளால் விடுதலை புலிகளிடம் சண்டை யிட்டுள்ளார், பரமேஸ்வரன். அப்போது மரத்தின் மேல் மறைந்து இருந்த விடுதலைப்புலி வீரர் ஒருவர் சுட்ட குண்டு

அவர் நெஞ்சில் பாய்ந்தது... அந்த வேளையிலும்... தன்னுடன் இருந்த இந்திய வீரர்கள் ஒருவர் கூட உயிரிழக்கமால் பார்த்து கொண்ட பரமேஸ்வரன்... இறப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு கூட.. அருகே கிடந்த துப்பாக்கியை எடுத்து, மறைந்திருந்த விடுதலை புலிகளை தன் துப்பாக்கிக்கு இரையாக்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்