லால் சலாம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். மும்பையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் கபில்தேவ் உடனான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையடுத்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திற்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து தனது கார் மூலம் போயஸ் கார்டனில் உள்ள இல்லத்திற்கு ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.