"ஊசிய போட்டு வெளியதான் வந்தேன் அப்பா'னு.. என் புள்ள சொன்ன வார்த்தை" தொண்டை அடைக்க கதறும் தந்தை

Update: 2022-11-08 11:59 GMT

விருதுநகர் மாவட்டத்தில் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு சென்ற சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் செவிலியர் கைது செய்யப்பட்ட நிலையில், மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி சிறுவனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவருடைய 5 வயது மகன் கவிதேவநாதனுக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்கள் வீட்டின் அருகில் வசிக்க கூடிய செவிலியர் அக்மேஸ் என்பவரிடம் குழந்தையை அழைத்து சென்றுள்ளனர். அவர் மருத்துவம் பார்த்து 3 நாளாகியும் குழந்தை சரி ஆகவில்லை. இதனால், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் ஆரம்பித்துள்ள மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் அளித்த சிகிச்சையில் குழந்தையின் உடல்நலம் மிகவும் கவலைகிடமாகியுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற குழந்தையை அம்மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட, குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதையடுத்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், இவ்விவகாரத்தில் முதலில் சிகிச்சை பார்த்த செவிலியர் கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டாவதாக சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை மருத்துவரையும் கைது செய்யக்கோரி குழந்தையின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்