கொட்டி தீர்த்த கனமழை... அரசு மருத்துவமனையில் ஒழுகிய மழைநீர் - அதிருப்தியில் நோயாளிகள்

Update: 2023-04-27 10:36 GMT

திருநெல்வேலி மாவட்டம், அரசு மருத்துவமனையில் மழை நீர் ஒழுகிய சம்பவம் நோயாளிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம், நெல்லை மாவட்டம் முழுவதும், பலத்த மழை பெய்தது. இந்நிலையில், தென் மாவட்டங்களின் பிரதான தலைமை மருத்துவமனையான, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் மழை நீர் ஒழுகியது. இச்சம்பவம் நோயாளிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொட்டி தீர்த்த கனமழை... அரசு மருத்துவமனையில் ஒழுகிய மழைநீர் - அதிருப்தியில் நோயாளிகள்

Tags:    

மேலும் செய்திகள்