சூதாட்ட விடுதிக்கு அதிரடி ரெய்டு... கார்களில் தப்பி ஓடிய மர்ம நபர்கள் - விரட்டி பிடித்த போலீசார்
- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, சூதாட்ட விடுதிக்கு போலீசார் சீல் வைத்து, 5 பேரை கைது செய்தனர்.
- ஆரம்பாக்கம் பூவலை கிராமத்தில், விளையாட்டு கிளப் என்ற பெயரில் மாந்தோட்டத்தில் இயங்கி வந்த விடுதியில் போலீசார் சோதனை செய்தனர்.
- போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் கார்களில் தப்பினர்.
- பெரும்பாலான கார்கள் ஆந்திர பதிவெண் கொண்டவை.
- சூதாட்ட விடுதிக்கு சீல் வைத்த போலீசார், நெற்குன்றத்தை சேர்ந்த சிலம்பரசன், ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேந்தர் உட்பட 5 பேரை கைது செய்தனர். சீட்டு கட்டுகள், 6 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் பணம் எண்ணும் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.