"தமிழகத்தின் பிரச்சினைகளை ராகுல்காந்தி உன்னிப்பாக கவனித்து வருகிறார்".. எம்.பி.ஜோதிமணி பேட்டி

Update: 2022-09-08 14:51 GMT

அனிதாவின் குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கைகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புரிந்து கொண்டதாகவும், தமிழகத்தில் உள்ள இது போன்ற பிரச்சனைகளை அவர் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் எம்.பி.ஜோதிமணி தெரிவித்தார்.

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் சகோதரர், ராகுல் காந்தியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த போது ஜோதிமணி உடன் இருந்தார்.

இது குறித்து பேசிய அவர், நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு அந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

மேலும் அனிதா போன்ற மாணவிகள் 98 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றாலும் மருத்துவம் படிக்க இயலாத சூழலை பாஜக அரசு ஏற்படுத்துவதாக அவர் குற்றச்சாட்டினார்.

அனிதாவின் குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கைகளை ராகுல் காந்தி புரிந்து கொண்டதோடு தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவற்றை மத்திய அரசு செவி கொடுத்து கேட்கவில்லை என நாடாளுமன்றத்தில் பேசி தமிழகத்தின் குரலாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் ஒலித்ததாகவும் ஜோதிமணி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்