"துரதிர்ஷ்டவசமாக எம்பி ஆகிவிட்டேன்".. ராகுலின் பேச்சால் வெடித்த சர்ச்சை - வீடியோவை பகிர்ந்து கிண்டலடிக்கும் பாஜக
- டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, செய்தியாளர் சந்திப்பு நடத்திய போது முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சில திருத்தங்களை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- ராகுல்காந்தி, தமது பேச்சில், துரதிர்ஷ்டவசமாக எம்.பி.ஆனேன் என கூறியுள்ளார்.
- அப்போது ஜெய்ராம் ரமேஷ் இடை மறித்து, திருத்தங்களை சொன்னார்.
- இதன் பிறகு அதனை ஏற்று ராகுல் காந்தி பேச்சை தொடர்ந்தார்.
- இந்த வீடியோவை பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, இன்னும் எத்தனை நாளைக்கு தான் ராகுல்காந்திக்கு கற்று கொடுக்க போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.