வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததால் ஆத்திரம் - மகளின் காதலனை கொலை செய்த பெண் தரப்பு
தெலங்கானாவில் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை மகள் காதலித்த ஆத்திரத்தில் மகளின் காதலனை பெண் வீட்டார் ஆவணக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். மகளின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே, நவீனை அழைத்து அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனாலும் காதலில் இருவரும் உறுதியாக இருக்கவே தெரிந்தவர்களை வைத்து சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். அப்போது டூவீலர்களில் திடீரென வந்த பெண்ணின் உறவினர்கள் நவீனை தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த நவீன் சம்பவ இடத்திலேயே பலியானார். நவீனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.