நீண்ட காலம் ராணியாக பதவி வகித்த ராணி எலிசபெத் மறைவு

நீண்ட காலம் ராணியாக பதவி வகித்த ராணி எலிசபெத் மறைவு

Update: 2022-09-09 01:28 GMT

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

96 வயதாகும் அவருக்கு அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

வியாழக்கிழமை காலை அவருடைய உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து, ராணியின் மகனும், இளவரசருமான சார்லஸ், பேரன்கள் வில்லியம், ஹாரி மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பால்மோரல் பண்ணைக்கு வந்தனர்.

மாலையில், பண்ணை வீட்டிலேயே எலிசபெத்தின் உயிர் பிரிந்தது.அவருடைய மறைவை பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கடந்த 1926-ஆம் ஆண்டு பிறந்த எலிசபெத், 1953-ஆம் ஆண்டு ராணியாக அரியணை ஏறினார். தொடர்ந்து 70 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்து, மிக நீண்ட காலம் ராணியாகப் பதவி வகித்த பெருமையைப் பெற்றுள்ளார்.

நீண்ட காலம் ராணியாக பதவி வகித்த ராணி எலிசபெத் மறைவு

வின்ஸ்டன் சர்ச்சில் முதல், 2 நாள்களுக்கு முன்பு தேர்வான லிஸ் டிரஸ் வரை 15 பிரதமர்களை நியமனம் செய்துள்ளார் எலிசபெத்.

Tags:    

மேலும் செய்திகள்