"இந்த நிலைக்கு காரணம் நீங்கள் தான்" - கடும் கோபத்தில் புதின்
உலகளாவிய பணவீக்கத்திற்கு ரஷ்யா காரணம் அல்ல என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பணவீக்கத்திற்கு ரஷ்யா காரணம் அல்ல என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகள் உலகளாவிய பொருளாதார சிக்கல்களுக்கு காரணம் அல்ல என்று தெரிவித்த அவர், மாறாக மேற்கத்திய நாடுகள் தங்கள் சொந்த தவறுகளை மறைப்பதற்காக ரஷ்யாவை குற்றம் சாட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். விலைவாசி உயர்வு, பணவீக்கம், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் விலை அதிகரிப்பு ஆகியவற்றிற்கு அமெரிக்க நிர்வாகம் மற்றும் ஐரோப்பிய அதிகாரத்துவத்தின் பொருளாதார கொள்கையில் உள்ள தவறுகள் தான் காரணம் என்றும் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.