அணு ஆயுத மிரட்டல் விடுத்த புதின்.. பைடன் பகீரங்க எச்சரிக்கை
ஏற்கனவே கூறியபடி புதின் அணு ஆயுதங்களை உபயோகித்தால் உலகம் நன்மைக்கும் தீமைக்குமான இறுதிப் போரை சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1962ல் சோவியத் யூனியனால் ஏற்பட்ட கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு தற்போது மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக அணு ஆயுத மிரட்டல் வந்துள்ளதாக பைடன் தெரிவித்தார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஜனநாயக கட்சி நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பைடன், ரஷ்ய அதிபர் புதினின் அணு ஆயுத மிரட்டல் குறித்து எச்சரிக்கை விடுத்தார். மேலும், புதின் அணு ஆயுதங்களை உபயோகித்தால் உலகம் நன்மைக்கும் தீமைக்குமான இறுதிப் போரை சந்திக்கும் என்றும் பைடன் எச்சரித்தார்.