நீதிமன்றம் அருகே திடீர் மோதல்... இருவர் மீது பாய்ந்த குண்டு - பரபரப்பு சம்பவம்

Update: 2023-02-08 02:42 GMT

லூதியானா நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக சென்று கொண்டிருந்த 2 பேரிடம், அங்கு வந்த மற்றொரு தரப்பினர், தகராறு செய்னர்.

ஒரு கட்டத்தில் இரு தரப்பும் தாக்கிக் கொண்டதை அடுத்து, எதிர்த் தரப்பினர், இருவரையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.

இதில், காயமடைந்த ஹிமான்ஷு, ஜஸ்பிரீத் சிங் ஆகிய இருவரும் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக விசரணை மேற்கொண்ட போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்