குடிநீர் தொட்டியில் மனிதகழிவு கலந்த விவகாரம் "முரணான தகவல்கள் தரும் பொதுமக்கள்" சிபிசிஐடி வெளியிட்ட பகீர் தகவல்...

Update: 2023-02-16 03:41 GMT
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தேக்க தொட்டியில் மனிதகழிவுகள் கலந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாதது குறித்து சிபிசிஐடி போலீசார் பரபரப்பு தகவல்களை முன்வைத்துள்ளனர்.
  • இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இந்த சம்பவத்தை சிபிசிஐடி போலீசார் கையிலெடுத்துள்ள நிலையில், கிராமமக்கள், ஊராட்சிமன்ற தலைவர் உட்பட சில காவலர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • இந்த சம்பவத்தில், நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை பொதுமக்கள் தருவதால் குற்றவாளிகளை பிடிக்க இயலவில்லை போலீசார் தெரிவிக்கின்றனர்.
  • இந்த விவகாரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும், மனிதகழிவு கலந்த குடிநீரை குடித்தனால் பாதிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது.
  • இதனால், குழப்பமடைந்த அதிகாரிகள் மருத்துவர்களிடம் அறிக்கை சமர்பிக்க கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்