திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள்... தர தரவென இழுத்து சென்ற போலீஸ் - பரபரப்பு காட்சிகள்
கல் குவாரியை மூடக்கோரி 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ,மெய்யபுரம் கிராமத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அதிக அளவில் வெடி மருந்துகள் பயன்படுத்து பாறைகள் வெடிக்கப்படுவதால், பழமையான வழிபாட்டு தலங்களில் விரிசல் விழுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதைக் கண்டித்து, மதுரை-தஞ்சாவூர் சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.