நகை அடகுக்கடை ஓனரையும் தடுக்க சென்ற 6 பேரையும் கடித்து குதறிய அண்ணன், தம்பி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், நகைக்கடை உரிமையாளர் உட்பட 7 பேரை 2 சகோதரர்கள் கடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திரா நகரை சேர்ந்த சகோதரர்கள் அய்யாசாமி மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் அடகு வைத்த நகையை மீட்க சென்றபோது, உரிமையாளர் லட்சுமணனுடன் தகராறு ஏற்பட்டதால், அவரை கடித்துள்ளனர். மேலும் தடுக்கச் சென்ற 6 பேரை கடித்ததால் 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, சகோதர்கள் இரண்டு பேரையும் பிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.