காரைக்காலில், என்சிசி கடற்படை பிரிவு மாணவர்களின் பாய்மர படகு பயணத்தை அமைச்சர் சந்திர பிரியங்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் இருந்து கடல் வழி சாகச பயணமாக, என்சிசி கடற்படை பிரிவு மாணவர்கள் காரைக்கால் வந்தனர். பின்னர், மீண்டும் புதுச்சேரிக்கு கடல் வழியாக பாய்மர படகுகளில் என்சிசி கடற்படை பிரிவு மாணவர்கள் புறப்பட்டனர். புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் கொடியசைத்து மாணவர்களை வழி அனுப்பி வைத்தனர்.