அதிகாரிகளை ஒருமையில் பேசி மிரட்டிய பாஜக எம்.எல்.ஏ - புதுச்சேரியில் பரபரப்பு
- புதுச்சேரியில் பாஜகவினர் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்துவிட்டு, கவுரவ கார்டுகளை வாங்கச் சென்ற போது, அதிகாரிகளுடன் பாஜக எம்.எல்.ஏ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
- அதில், அரசின் நலத்திட்டங்கள் பெற விரும்பாத வசதி படைத்தோர் தங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு கவுரவ கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது.
- இதையடுத்து, பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் ரேஷன் கார்டுகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க பாஜகவினர் சென்றனர்.
- அப்போது, பாஜக எம்.எல்.ஏ கல்யாண சுந்தரம் அதிகாரிகளை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- ரேஷன் கார்டு பெற வருபவர்களிடம் லஞ்சம் கேட்கப்படுவதாகக் கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.