21 மாதங்களில் 247 சிசுக்கள் உயிரிழப்பு... புதுக்கோட்டை மருத்துவமனையில் அதிர்ச்சி
- புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இயங்கி வரும் அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில், தினந்தோறும் ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காக வருகிறார்கள். இவர்களில் பலருக்கு சுகப்பிரசவமாகி தாயும் சேயும் நல்ல முறையில் வீடு திரும்புகின்றனர்.
- ஆனால் சிலருக்கு பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பிரசவத்தின்போது குழந்தை இறப்பதும் நடக்கிறது.
- கடந்த 21 மாதங்களில் பிரசவத்தின்போது 247 சிசுக்கள் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சித் தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒருவர் பெற்றுள்ளார்.
- எனவே, தமிழக அரசு உடனடியாக விசாரணை குழுவை இறப்பு விகிதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.