பிரதமரின் புதிய அலுவலகம் கட்டுவதற்கு டெல்லி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
எக்ஸிகியூட்டிவ் என்க்ளேவ் திட்டத்தின் கீழ் பிரதமரின் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது.
இந்நிலையில், அலுவலகத்தை கட்ட சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு இரண்டாவது முறையாக டெல்லி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.