நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியின் ப்ளூ நிற கோட் பலரது கவனம் ஈர்த்தது. நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கலின் போது குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக மக்களவைக்கு வந்த அவர், மறுசுழற்சி செய்யப்பட்ட ப்ளு நிற கோட் ஒன்றை அணிந்து வந்தார்.
பிரதமர் மோடிக்கு இந்தியன் ஆயில் கார்பரேஷன் அன்பளிப்பாக வழங்கிய இந்த கோட், முழுக்க முழுக்க மறுசுழற்சி செய்யப்பட்ட PET பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆனது.