புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் தொடர்ந்து அர்ப்பணிப்போடு தமிழிசை செளந்தரராஜன் சேவை செய்வார் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.