சாம்பாரில் விழுந்த பூரான் - சாப்பிட்ட 30 செவிலியர் நிலை? மருத்துவ கல்லூரி முதல்வர் விளக்கம்

Update: 2022-10-12 17:28 GMT

சாம்பாரில் விழுந்த பூரான் - சாப்பிட்ட 30 செவிலியர் நிலை? மருத்துவ கல்லூரி முதல்வர் விளக்கம்..

நாகப்பட்டினத்தில், சாம்பாரில் பூரான் விழுந்த உணவு சாப்பிட்ட 30 செவிலியர் நலமுடன் உள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன்,

சிகிச்சைக்கு வந்த 30 மாணவிகளில் இருவருக்கு மட்டுமே வாந்தி மயக்கம் ஏற்பட்டது என்றும் மற்ற 28 மாணவிகள் பூரான் கிடந்த உணவை சாப்பிடவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் முதலுதவி சிகிச்சைக்கு பின் 30, மாணவிகளும் செவிலியர் பயிற்சி பள்ளிக்கு திரும்பியுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்

Tags:    

மேலும் செய்திகள்